திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலிக்கு வருகை தந்த சீனாவை சேர்ந்த யாரோய் யாங் (35), கோயிலின் புனிதத்தை அறிந்து வீடு வாடகைக்கு எடுத்து பிப்ரவரி 26ஆம் தேதி முதல் தங்கியிருந்தார். ஆனால், நாட்டில் பரவ தொடங்கிய கரோனா வைரஸ் அச்சத்தால் மார்ச் இறுதியில் வீட்டின் உரிமையாளர் அவரை தங்குவதற்கு அனுமதிக்கவில்லை. இவர் சீனாவை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தினால், மற்ற தங்கும் விடுதிகளிலும் இடம் கிடைக்காமல் தவித்து வந்துள்ளார்.
செய்வதறியாது விழித்துக்கொண்டிருந்த யாங்க்கு புதிய ஐடியா தொன்றியது. அவர் திருவண்ணாமலை மலையில் உள்ள விருபாக்ஷி குகையில் 10 நாள்களாக தனிமையில் தங்கிருந்துள்ளார். தனக்கு தேவையான உணவுகளை வாங்குவதற்காக மட்டும் ஒவ்வொரு நாளும் மலையிலிருந்து கிழே இறங்கி வந்து வாங்கிக்கொண்டு மீண்டும் குகைக்கு திரும்பியுள்ளார். இதைப் பார்த்து அச்சமடைந்த அப்பகுதி மக்கள், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்தத் தகவலின் பேரில், குகைக்கு விரைந்த காவல் துறையினர் யாங்கை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கரோனா பரிசோதணை செய்யப்பட்டதில் அவருக்கு கரானா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கூறுகையில், "சீன நாட்டைச் சேர்ந்த நபருக்கு கரோனா தொற்று இல்லை, இருப்பினும் அனைத்து விதமான வசதிகளையும் மாவட்ட நிர்வாகமே செய்து கொடுக்கும். தற்போது அவர் அத்தியந்தல் ரமண மகரிஷி ரங்கம்மாள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இவர் சொந்த நாட்டிற்கு திரும்பும் வரை அவருக்கு மாவட்ட நிர்வாகம் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தரும் என்றார்.
இதையும் படிங்க: மன அழுத்த பாதிப்பு: அழைப்புதவி எண்ணை அறிமுகப்படுத்திய சென்னை மாநகராட்சி