திருவண்ணாமலை: ஆரணி அண்ணா சிலை அருகில் அதிமுக சார்பில் நடைபெற்ற மொழிபோர் தியாகி வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம் அதிமுக நகர மாணவரணி செயலாளர் குமரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் தூசி மோகன், முன்னாள் அமைச்சர்கள் சேவூர் ராமசந்திரன், இ. மோகன் மற்றும் அதிமுக செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான பாபுமுருகவேல் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் மொழிப்போர் தியாகி வீரவணக்க பொதுகூட்டத்தில் பேசிய அதிமுக செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான பாபுமுருகவேல் பேசியபோது, வருகின்ற இந்த வாரத்தில் வழக்கு தீர்ப்பு வந்துவிடும். தீர்ப்பு அதிமுகவிற்கு சாதகமாகத் தான் வரும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடும். சமரசம் கிடையாது. ஓ.பி.எஸ் இ.பி.எஸ் கெட் அவுட்’ என்றார்.
இவ்வாறு மேடையில் தவறுதலாக பேசியதால் அங்கிருந்த நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், பேசிய பாபுமுருகவேல், 'ஒன்றரை கோடி தொண்டர்களின் கோவிலாக உள்ள தலைமைச்செயலகத்தை எட்டி உதைத்து சின்னபின்னமாக்கிய ஓ.பி.எஸ்ஸிடம் சமரசம் கிடையாது. கமலாயத்திற்கு செல்லாதீர்கள் என உதயநிதி ஸ்டாலின் கூறுகின்றார். பாரதிய ஜனதா கட்சி கூட்டணி பற்றி பேச அதிமுக கார் கமலாயத்தில் 2 மணி நேரம் காத்திருப்பதாக கூறுகின்றார்.
நீங்கள் எந்த வீட்டிற்குச் சென்றுள்ளீர்கள் என்று திமுகவிடம் கேளுங்கள்’ என்று இவ்வாறு அதிமுக செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான பாபுமுருகவேல் பேசியுள்ளார்.
இதையும் படிங்க:வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் என் பச்சை பேனா வேலை செய்யும் - எம்.பி. கதிர் ஆனந்த் எச்சரிக்கை