ETV Bharat / state

அருணாசலேசுவரர் கோயிலில் பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு விழா - Arunachaleswarar temple festival

அருணாசலேசுவரர் கோயிலில் ஆடிப்பூரம் பிறம்மோற்சவ விழாவை முன்னிட்டு பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது.

அம்மனுக்கு வளைகாப்பு விழா
அம்மனுக்கு வளைகாப்பு விழா
author img

By

Published : Aug 1, 2022, 10:21 PM IST

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் ஆடிப்பூரம் பிறம்மோற்சவ விழாவை முன்னிட்டு பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வளைகாப்பு விழா நடைபெற்றது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகின்ற எல்லாம் வல்ல அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மன் கோயிலில் ஆடிப்பூரம் பிறம்மோற்சவம் கடந்த 23 ஆம் தேதி உண்ணாமலை அம்மன் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அம்மனுக்கு வளைகாப்பு விழா

அதனை தொடர்ந்து கடந்த பத்து நாட்களும் தினமும் காலையும் மாலையும் பராசக்தி அம்மன் கோயிலின் நான்கு மாத வீதிகளில் பவனி வந்தார். பத்தாம் நாளான இன்று பராசக்தி அம்மனுக்கு சிவகங்கை புன்னிய தீர்த்த குளத்தில் மதியம் தீர்த்தவாரி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து மாலை பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவமும் நடைபெற்றது. வளைகாப்பு விழாவில் அம்மனுக்கு வளையல், குங்குமம், மஞ்சல், தாலிகயிறு போன்ற மங்கள பொருட்களை சிவாச்சாரியார்கள் அம்மனுக்கு சாற்றினர்.

பராசக்தி அம்மனுக்கு நடைபெற்ற வளைகாப்பு விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு சாற்றப்பட்ட வலையலை பெற்று சென்றனர்.

இதையும் படிங்க: மின் கம்பங்கள் அமைக்க மரங்கள் வெட்டினால் அருகில் புதிய மரக்கன்று நட உத்தரவு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.