ETV Bharat / state

கண்ணாடி பெட்டியில் அமர்ந்து நோய் எதிர்ப்பு சக்தி குறித்த விழிப்புணர்வு

திருவண்ணாமலை: உடல் ஆரோக்கியத்தின் அவசியத்தை வலியுறுத்தி கண்ணாடி பெட்டியில் 45 நிமிடம் அமர்ந்து தியானம், மூச்சுப் பயிற்சி உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தி குறித்த விழிப்புணர்வை அருணாச்சலம் ஆதீனம் மேற்கொண்டார்.

தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சியின் மூலம் கண்ணாடி குடுவையில் 45 நிமிடம் அமர்ந்து நோய் எதிர்ப்பு சக்தி குறித்த விழிப்புணர்வு

author img

By

Published : Sep 12, 2020, 3:04 PM IST

திருவண்ணாமலை நகரில் உள்ள அருணாச்சலம் திரையரங்கில், உடல் ஆரோக்கியத்தின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக அருணாச்சலம் ஆதீனம் என்ற சரவணன், காற்று புகாத கண்ணாடி பெட்டியில் 45 நிமிடம் தியானத்தில் அமர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தற்போது கரோனா நோய்த் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தேவை அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சியின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கரோனா தொற்றிலிருந்து அனைவரும் விடுபட முடியும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

முற்றிலும் கண்ணாடியால் மூடப்பட்ட காற்று புகாத கண்ணாடி பெட்டியில் 45 நிமிடங்களுக்கு மேல் அமர்ந்து இந்த தியானத்தை, அருணாச்சலம் ஆதீனம் நிகழ்த்திக் காட்டினார். இறுதியில் தியானத்தை முடித்துக்கொண்டு வெளியே வந்ததும் ஆதீனத்தின் நாடித்துடிப்பை மருத்துவர் பரிசோதித்த போது எந்தவித மாற்றமும் இல்லாமல் நாடித்துடிப்பு இருந்தது. தியானத்திற்கு இடையில் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக மாணவிகள் இருவர் பரத நாட்டிய ஆடினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.