திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் திருக்கோயில் ராஜகோபுரம் முன்பு அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைத்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஆக.29) தெற்கு மாவட்டச் செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
நகரச் செயலாளர் ஜெ.எஸ். செல்வம் அதிமுக கழக நிர்வாகிகள், வட்டச் செயலாளர்களிடம் அதிகாரிபோல் செயல்படுவதாக அம்மா பேரவைச் செயலாளர் பீரங்கி வெங்கடேசன், குற்றஞ்சாட்டினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர்.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி இருவருக்குமிடையில் அமர்ந்திருந்த நிலையிலும் அதனையும் பொருட்படுத்தாமல் இருவரும் வாய்ச் சண்டையில் ஈடுபட்டது கட்சி நிர்வாகிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.