ETV Bharat / state

மருத்துவமனை வளாகத்தில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிப்பு - தீயணைப்பு வீரர்களை பாராட்டிய மக்கள்

திருவண்ணாமலை: செங்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தீயணைப்பு வாகனம் மூலம் தீயணைப்பு வீரர்கள் கிருமி நாசினி தெளித்தனர்.

fire service
fire service
author img

By

Published : Mar 28, 2020, 6:19 PM IST

நாடு முழுவதும் கரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில் கிராம மக்களிடையே கரோனா பீதி அதிகரித்துள்ளது. கிராமப்புற பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் தங்களது வீடுகளின் வாசல்களில் மஞ்சள் கலந்த நீரை கிருமி நாசினியாக உபயோகித்து வருகின்றனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் காவல் துறையினர் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பொது இடங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும், சோப்பு போட்டு தினமும் குறைந்தது 20 முறையாவது கை கழுவ வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர்.

கிருமி நாசினி தெளிக்கும் தீயணைப்பு வீரர்கள்

அதேபோன்று செங்கம் அரசு மருத்துவமனையில் செங்கம் தீயணைப்புத் துறையினர் சார்பில் சுமார் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கிருமி நாசினி மருந்துகளை, தீயணைப்பு வாகனத்தின் மூலம் தெளித்தனர். இதனால், மருத்துவமனைக்கு வரும் குழந்தைகள், வயதான நோயாளிகளுக்கு எவ்வித நோய் தொற்றும் ஏற்படாத வகையில் தெளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: நேபாளத்தில் சிக்கித் தவித்த தமிழர்கள் ஓபிஆர் உதவியுடன் மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.