திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆவணி மாத பௌர்ணமி காணிக்கை உண்டியல் நேற்று (அக். 3) திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. அதன் பணிகள் கோயிலின் 3ஆம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில், கோயில் இணை ஆணையர் அசோக் குமார் மேற்பார்வையில் நடைபெற்றது. இவ்வாறு நடைபெற்ற பக்தர்களின் காணிக்கையை எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள் மற்றும் சிவனடியார்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இவை அனைத்தும் கோயில் நிர்வாகம் சார்பாக வீடியோ பதிவுடன் கூடிய பலத்த பாதுகாப்புடன் நிகழ்ந்தது.
இறுதியாக அண்ணாமலையார் கோயில் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள நிரந்தர மற்றும் தற்காலிகமாக இருக்கும் 70 உண்டியல்களில் இருந்து மொத்தம் 1 கோடியே 60 லட்சத்து 13 ஆயிரத்து 349 ரூபாயும், 2,391 கிராம் தங்கமும் மற்றும் 1,316 கிராம் வெள்ளியும் காணிக்கையாக பெறப்பட்டது.
இதையும் படிங்க: அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி 7ஆம் நாள் விழா கோலாகலம்