ETV Bharat / state

கார்த்திகை தீபத் திருவிழா: அண்ணாமலையார் கோயிலில் ஏழாம் நாள் மகா ரத தேரோட்டம் கோலாகலம்! - மகா ரத தேரோட்டம்

திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஏழாம் நாள் மகா ரத தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. உள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஏழாம் நாளில் களைகட்டிய அண்ணாமலையார் மகா ரத தேர் ஊர்வலம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2023, 10:01 PM IST

ஏழாம் நாளில் களைகட்டிய அண்ணாமலையார் மகா ரத தேர் ஊர்வலம்

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயில் தீபத் திருவிழாவை முன்னிட்டு ஏழாம் நாளான இன்று (நவ. 23) அண்ணாமலையார் தேர் ஊர்வலம் லட்சக்கணக்கான பக்தர்களுடன் தொடங்கப்பட்டு வெகு விமரிசையாக நடைபெற்றது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 17ஆம் தேதி திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியோற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது.

திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் 7ஆம் நாளான இன்று (நவ.23) பஞ்ச மூர்த்திகளின் மகாரத தேரோட்டம் காலை 7:45 மணியளவில் நடைபெற்றது. விநாயகர் தேரானது பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டு மாட வீதியில் வலம் வந்து, நிலையை அடைந்த பின்பு முருகர் தேரானது வடம் பிடித்து இழுக்கப்பட்டு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து நிலையை அடைந்தது.

அதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படுகின்ற மகாரத தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. இந்தத் தேரோட்டத்தில் தமிழ்நாடு சட்டப் பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் ஆகியோர் வடத்தைப் பிடித்து தேரினை இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அண்ணாமலைக்கு அரோகரா என பக்தி கோஷங்களை முழக்கமிட்டு தேரின் வடத்தைப் பிடித்து இழுத்து மாட வீதிகளில் வலம் வந்தனர்.

இதனைக் காண திருவண்ணாமலை மட்டுமின்றி சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தேர் திருவிழாவில் கலந்து கொண்டு அண்ணாமலையாரை தரிசித்தனர். மகா ரதம் என்று அழைக்கக்கூடிய பெரிய தேர் 300 டன் எடை கொண்டது. இந்த தேர் 58.5 அடி உயரம் கொண்டது.

மகா ரத தேர் திருவிழாவினையொட்டி பக்தர்களின் பாதுகாப்பிற்காக 4 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வருகின்ற 26ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலின் கருவறையில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபமும் ஏற்றபட உள்ளது.

இதையும் படிங்க: "அண்ணாமலையாருக்கு அரோகரா" - 7 ஆம் நாள் அண்ணாமலையார் கோயில் தீபத் திருவிழாவில் விநாயகர் தேரோட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.