திருவண்ணாமலை: அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவானது விமர்சையாக நடைபெறும். அதன்படி கடந்த 6ஆம் தேதி மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இந்த 250 கிலோ எடையுள்ள மகாதீப கொப்பரை 5 அரை அடி உயரம், 3 அரை அடி மேல் விட்டம் , 2 அரை அடி கீழ்ப்பகுதி விட்டம் கொண்டிருக்கும்.
இந்த தீப கொப்பரை முழுவதும் செப்பு தகடுகளால் செய்யப்பட்டவை. இந்த தீபத்திற்கு 4,500 கிலோ நெய்யும், 1,150 மீட்டர் காயத்திரியும் பயன்படுத்தப் படுகிறது. இந்த தீபம் தொடர்ந்து 11 நாட்கள் தீபமலை மீது தீப்பிழம்பாக ஜோதி வடிவாக அண்ணாமலையார் பக்தர்களுக்குக் காட்சியளிப்பார் என்பது ஐதீகம்.
இந்நிலையில் நான்காவது நாளான இன்று காலை மாண்டஸ் புயல் காரணமாக, மிதமான சாரல் மழை பெய்து கொண்டிருக்கும் வேளையில், இன்று காலை 6 மணி அளவில் 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது சாரல் மழை மற்றும் பலத்த காற்று வீசிக்கொண்டிருந்த வேலையிலும், நகரி வாத்தியம் முழங்க தீபச்சுடர் அணையாமல் எரிந்துகொண்டிருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: கன்னியாகுமரியில் கடலில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி