ETV Bharat / state

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஓபிஎஸ்-க்கு சவால் விடுத்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி! - மு க ஸ்டாலின்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணியினர் டெபாசிட் இழப்பார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சவால் விடுத்துள்ளார்.

ஓபிஎஸ்கு சாவால் விட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி

author img

By

Published : Jan 22, 2023, 9:57 AM IST

ஓபிஎஸ்கு சாவால் விட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி

திருவண்ணாமலை: அதிமுக தெற்கு மாவட்டத்தின் சார்பில் அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் அவர்களின் 106 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்ட விழா நேற்று (ஜன.21) வேடந்தவாடி பகுதியில், முன்னாள் அமைச்சர், போளூர் சட்டப்பேரவை உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, “அதிமுகவுக்குத் துரோகம் செய்யும் வகையில் பன்னீர்செல்வம் நடவடிக்கைகள் உள்ளது. அதிமுகவின் சின்னத்தை முடக்க வேண்டும் என்பதற்காகவே பாஜகவுக்குத் தேர்தலில் போட்டியிட ஆதரவு தெரிவித்துள்ளார். வருகின்ற ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் தெம்பு, திராணி, தைரியம் இருந்தால் பன்னீர்செல்வம் அணியினர் போட்டியிடட்டும். பன்னீர்செல்வத்தை டெபாசிட் வாங்காத அளவிற்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தோற்கடிப்பார்” என்று உரையாற்றினார்.

தொடர்ந்து பேசுகையில், “எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒட்டுமொத்த தொண்டர்கள், அடிப்படை உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர். ஒரு கோடி ஸ்டாலின் சேர்ந்து வந்தாலும் கூட அதிமுக என்ற இயக்கத்தினை அழிக்க முடியாது. கடந்த காலங்களில் எம்ஜிஆர் ஆட்சியிலும் ஜெயலலிதா ஆட்சியிலும் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் தான் வறட்சி மற்றும் புயல் வெள்ள பாதிப்பு ஆகியவற்றுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்பட்டது.

ஆட்சிக்கு வருவதற்குப் பல பொய் வாக்குறுதிகளை அளித்து திமுக அரசு, நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறி 20 மாதங்கள் ஆகியும் இதுவரை நீட் தேர்வை ரத்து செய்யவில்லை. இதனால் இதுவரை 15 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால் தமிழக மாணவர்களின் நலன் கருதி அதிமுக அரசு மருத்துவ படிப்பில் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டை உறுதி செய்து ஒவ்வொரு ஆண்டும் 556 மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்கும் நிலையை ஏற்படுத்தித் தந்தது” என்றார்.

மேலும் பேசிய அவர், “அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காகவாக விளங்கியது. ஆனால் தற்போது திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து சட்டம் ஒழுங்கு சீர் குறைந்து உள்ளது. குறிப்பாகத் தமிழகத்தில் போதை நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த போதைப் பொருட்களை விற்பனை செய்வது திமுகவினர் தான். அதனால்தான் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க முடியவில்லை. காவல்துறை அதிகாரிகளே மனவேதையில் தவிக்கிறார்கள்.

தற்போதைய திமுக அரசு ஆட்சிக்கு வந்து 20 மாத காலம் ஆகியும் அதிமுக அறிவித்த திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி தன் திட்டங்களாகச் செயல்படுத்தி வருகிறது. 20 மாத திமுக ஆட்சியில் எந்த ஒரு திட்டங்களையும் தமிழக அரசு அறிவிக்கவில்லை. யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது.?” எனக் குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; எந்த கூட்டணியில் யார் யார்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.