ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பிய பட்டியல் இனத்தவர் மீது அதிமுக பிரமுகர் தாக்குதல்! - கருந்துவாம்பட்டி தலித் மீது தாக்குதல்

திருவண்ணாமலை: கருந்துவாம்பாடி கிராமத்தில் ஊராட்சி மன்றத் தேர்தலில், போட்டியிட விரும்பிய பட்டியல் இனத்தவர் குடும்பத்தினர் மீது, அதிமுக பிரமுகர் நடத்தியத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

திருவண்ணாமலை துரிஞ்சாபுரம் பிரச்னை  திருவண்ணாமலை மாவட்டச் செய்திகள்  thiruvannamali district news  உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பிய தலித் மீது தாக்குதல்  admk person attacked dalith who wish to participated the local body election in thiruvanamalai  கருந்துவாம்பட்டி  கருந்துவாம்பட்டி தலித் மீது தாக்குதல்
admk person attacked dalith who wish to participated the local body election in thiruvanamalai
author img

By

Published : Nov 27, 2019, 12:56 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் கருந்துவாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஏசு முனுசாமி, பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். இவர், உள்ளாட்சித்தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக, அவரது உறவினர்கள் நண்பர்களிடம் கூறி வந்துள்ளார்.

இதனை அறிந்த அதிமுகவைச் சேர்ந்த அப்பகுதியின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சிவக்குமார், அவரது தம்பி கோகுல கிருஷ்ணன், பன்னீர் செல்வம் ஆகியோரோடு வந்து, 'ஒரு வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதற்குக் கூட தகுதியில்லாத நீ, உள்ளாட்சித்தேர்தலில் நிற்கப்போகிறாயா' என்றும் ஏசு முனுசாமியின் சாதியைச் சொல்லியும் திட்டியுள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பிய பட்டியல் இனத்தவர் மீது தாக்குதல் நடத்திய அதிமுக பிரமுகர்

மேலும், கத்தி, இரும்பு கம்பி போன்றவற்றால் ஏசு முனுசாமியின் குடும்பத்தைத் தாக்கி விட்டு தலை மறைவாகி விட்டனர். இதில் காயமடைந்த ஏசு முனுசாமி குடும்பத்தினர், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவலர்கள் தலைமறைவாகியுள்ள சிவக்குமார் உள்ளிட்டோர்களைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த இளைஞரின் தலையை வெட்டிய பெண் வீட்டாரின் கொடூரச் செயல்!

Intro:உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பிய தலித் குடும்பத்தினர் மீது, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலைவெறி தாக்குதல்.

Body:உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பிய தலித் குடும்பத்தினர் மீது, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலைவெறி தாக்குதல்.

Conclusion:உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பிய தலித் குடும்பத்தினர் மீது, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலைவெறி தாக்குதல்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.