திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுக்கா ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் நேற்று (ஜனவரி 17) காணும் பொங்கலை முன்னிட்டு காளை மாடு விடும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் 300-க்கும் மேற்பட்ட காளை மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டன.
பல்வேறு கிராமங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகளின் கொம்புகளில் விலை உயர்ந்த பட்டுப்புடவைகள், வெள்ளி தங்க நகைகளை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் சிறுவள்ளுர், கிடாம்பாளையம், வீரளுர், மேல்சோழஙகுப்பம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின்படி 4 டி.எஸ்.பிக்கள் தலைமையில் 6 இன்ஸ்பெக்டர்கள், 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாலை 4 மணிக்கு தொடங்கிய காளை விடும் விழா 6 மணி வரை நடைபெற்றது. முன்னதாக நிகழ்ச்சியை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்திருந்தார்.
இதையும் படிங்க: செம்மரக் கடத்தல் ஏஜென்ட் அடித்துக் கொலை - போலீஸ் விசாரணை