ETV Bharat / state

கார் பரிசாக வழங்கிய ரஜினிகாந்த்..! காரணம் தெரியுமா? - நடிகர் ரஜினிகாந்த்

அரசு மருத்துவமனைகளில் கேட்பாரற்று கிடக்கும் ஆதரவற்றோர் உடல்களை அனுமதியுடன் பெற்று நல்லடக்கம் செய்து வரும் நபரின் சேவையை பாராட்டி, நடிகர் ரஜினிகாந்த் கார் ஒன்றினை பரிசாக வழங்கி உள்ளார்.

கார் பரிசாக வழங்கிய ரஜினிகாந்த்
கார் பரிசாக வழங்கிய ரஜினிகாந்த்
author img

By

Published : Jun 24, 2023, 3:16 PM IST

திருவண்ணாமலை: சமூக சேவையில் அனைவரும் ஈடுபட முடியாது. அது மனம் சம்பந்தப்பட்டது. பக்குவப்பட்ட உள்ளமும், மக்கள் மீது அதிக அன்பும் இருந்தால் மட்டுமே சமூக சேவை செய்ய முடியும். ஒரு இளைஞர் தனது 16 வயது முதல் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். அவர் செய்து வரும் சமூக சேவை கடினமானது. அந்த பாதையில் தொடர்ந்து பயணம் செய்வது சாத்தியமில்லாத செயல்.

அவர் ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பை சேர்ந்தவர்கள் இயற்கை எய்திவிட்டால் அவர்கள் உடல்கள் அரசு மருத்துவமனை பிணவறைகளில் கேட்பாரற்று பலநாட்கள் இருக்கும். அதனை பெற எவரும் முன் வரமாட்டார்கள்.
அவ்வாறு பரிதாபத்துக்குரிய நிலையில் இருக்கும் உடல்களை காவல்துறை அனுமதியுடன் பெற்று நல்லடக்கம் செய்வதே அவரது பணி.

இதையும் படிங்க: Sundar Pichai: குஜராத்தில் கூகுளின் குளோபல் ஃபின்டெக் மையம் - சுந்தர் பிச்சை முக்கிய அறிவிப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் தலையாம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த மணிமாறன் தனது 16 வயதில் இந்த சேவையை தொடங்கி கடந்த 21 ஆண்டுகளாக தொய்வின்றி இந்த பணியை அர்ப்பணிப்பு மனதுடன் செய்து வருகிறார். தற்போது 37 வயதாகும் மணிமாறன் இதுவரை 2 ஆயிரத்து 45 ஆதரவற்றோர் உடல்களை நல்லடக்கம் செய்துள்ளார்.

தமிழகத்தில் தொடங்கிய இவரது சேவை தற்போது இந்தியா முழுவதும் விரிவடைந்து உள்ளது. இவரது சேவையை பாராட்டி மத்திய, மாநில அரசுகள் விருதுகள் வழங்கியுள்ளன. பல மாநில முதலமைச்சர்கள் பாராட்டுபெற்ற அவர் உலக சாதனையாளர் விருது, கவுரவ டாக்டர் பட்டம் ஆகியவையும் பெற்றுள்ளார்.

இதையும் படிங்க: அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் - பிரதமர் மோடி அறிவிப்பு

மணிமாறனை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் வாழ்த்தி உள்ளனர். கரோனா காலங்களிலும் மணிமாறன் தனது சேவையை தொடர்ந்து செய்து வந்தார். மேலும் தொழுநோயாளிகளுக்கும் மனமுவந்து சேவையாற்றி வந்தார்.

இதுபற்றி அறிந்த நடிகர் ரஜினிகாந்த், மணிமாறன் சேவையை மனதார பாராட்டி அவர் தடையின்றி சேவை செய்யும் வகையில் தனது அறக்கட்டளை சார்பில் நேற்று ஒரு காரை வழங்கி, மணிமாறன் தொடர்ந்து மக்கள் சேவை செய்ய ஊக்கம் அளித்தார். நடிகர் ரஜினிகாந்த் வழங்கிய காரை பெற்று கொண்ட மணிமாறன் கூறும்போது, “எனது சேவையை நன்கு அறிந்த நடிகர் ரஜினிகாந்த் கார் வழங்கியது என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. அவரது இந்த உதவி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது” என்றார்.

இதையும் படிங்க: ஒரே நாளில் சகோதரி, சகோதரனை இழந்த நடிகர் போஸ் வெங்கட்... சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.