ETV Bharat / state

அண்ணாமலையார் கோயிலில் ஆனித்திருமஞ்சனம் விழா - அருணாச்சலேஸ்வரர் கோயில்

அண்ணாமலையார் கோயிலில் ஆனித்திருமஞ்சன விழா இன்று விமரிசையாக நடைபெற்றது. சிவகாமசுந்தரி சமேத நடராஜர் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Aani Thirumanjanam ceremony at Arunachaleswarar Temple

author img

By

Published : Jul 15, 2021, 8:56 PM IST

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் எழுந்தருளியுள்ள நடராஜருக்கு, ஆண்டுதோறும் மார்கழி மாதம், திருவாதிரை நட்தசத்திரத்தன்று நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடைபெறும் ஆனி திருமஞ்சனமும் சிறப்புமிக்க விழாக் காலங்களாகும்.

ஆனி மாதம், உத்திர நட்சத்திரத்தன்று, சாயரட்சை பூஜையில் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்வதுதான் ஆனி திருமஞ்சனம்.

அதன்படி, திருவண்ணாமலை அண்ணாலையார் கோயிலில் இன்று ஆனித் திருமஞ்சன விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஆடல் வல்லானுக்கு ஆனித் திருமஞ்சனம்

இதனையொட்டி நேற்று (ஜூலை.14) இரவு அண்ணாமலையார் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில், நடராஜரும், சிவகாமசுந்தரி அம்மையும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

ஆடல் வல்லானுக்கு ஆனித் திருமஞ்சனம்

அதைத்தொடர்ந்து, இன்று அதிகாலை சிவகாமசுந்தரி நடராஜருக்கு சிறப்புப் பூஜைகளும், அலங்காரமும், தீபாரதனையும் நடைபெற்றது. பின்னர், அலங்கார ரூபத்தில் சுவாமியும், அம்மனும் 5ஆம் பிரகாரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

வழக்கமாக மாடவீதியில் சுவாமி பவனி வருவது வழக்கம். ஆனால் இந்த முறை கரோனா தொற்று காரணமாக மாடவீதியில் சுவாமி பவனி நடைபெறவில்லை.

இதையும் படிங்க: சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.