சென்னை: தமிழ்மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வில் 750 அரசுப் பள்ளி மாணவர்கள், 750 அரசுப் பள்ளி உள்பட அனைத்து வகைப் பள்ளி மாணவர்கள் தேர்வுச் செய்யப்பட்டதற்கான முடிவுகளை அரசுத் தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 11-ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் இலக்கியத்திறனை அறிந்துக் கொள்வதற்காக தமிழ் மொழி இலக்கியத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் தகுதிப்பெறும் 1500 மாணவர்களுக்கு 11, 12-ஆம் வகுப்பில் மாதம் 1500 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் 2024-25ஆம் கல்வியாண்டில் தமிழ் மாெழி இலக்கியத் திறனறிவுத்தேர்வு அக்டோபர் 19-ஆம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வினை 2 லட்சத்து 35 ஆயிரத்து 25 மாணவர்கள் எழுதினர்.
அவர்களில் 750 அரசுப் பள்ளி மாணவர்கள், 750 அரசுப் பள்ளி உள்ளிட்ட அனைத்து வகைப் பள்ளி மாணவர்கள் தேர்வுச் செய்யப்பட்டு, மாதம் 1500 ரூபாய் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் வழங்கப்படும்.
இதையும் படிங்க |
இந்த தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெற்றது. தேர்வு முடிவுகள் இன்று (டிசம்பர் 20) காலை 11 மணிக்கு, குறிப்பிடப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் (www.dge.tn.gov.in) இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
மாணவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்தத்தேதியை பதிவு செய்து மதிப்பெண்களை அறிந்துக் கொள்ளலாம். மேலும், ஊக்கத்தொகை பெறுவதற்கான மாணவர்களின் பட்டியலும் இணையதளத்திலேயே வெளியிடப்படும் என அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் லதா தெரிவித்துள்ளார்.