திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கீழ்புதுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் வீட்டில் மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்துள்ளதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், அவரது வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையில், வீட்டின் தோட்டத்தில் குழிதோண்டி பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
பின்னர், 78 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான 560 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், வெங்கடேசனை கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகள் 3 நாள்கள் மூடல்: 1,230 மதுபாட்டில்கள் பறிமுதல்!