திருவண்ணாமலை: செங்கம் அருகே உள்ள மோட்டூர் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான பழனி(40) என்பவர், தனது மனைவி வள்ளி(37), மகள்கள் த்ரிஷா(15), மோனிஷா(14), மகாலட்சுமி(6), மற்றும் மகன் சக்தி(6) ஆகியோரை அரிவாளால் கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு பின்னர் பழனி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
இந்த சம்பவத்தில் பழனி - வள்ளி தம்பதியின் மற்றொரு மகள் பூமிகா(9) உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குடும்பத் தகராறு காரணமாக இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: 'ரமணா' பட பாணியில் இறந்த பெண்ணுக்கு சிகிச்சை? சேலத்தில் நடந்தது என்ன?