ETV Bharat / state

மது பிரியர்களின் கூடாரமாக மாறிவரும் சிறுவர் பூங்கா - wine lovers tent

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சியில் பராமரிப்பின்றி கிடக்கும் சிறுவர் பூங்கா மது அருந்தும் கூடாரமாக மாறிவருகிறது

மது பிரியர்களின் கூடாரமாக மாறி வரும் சிறுவர் பூங்கா!!

author img

By

Published : Jun 18, 2022, 5:52 PM IST

திருவண்ணாமலை: செங்கம் பேரூராட்சி பெருமாள் கோவில் தெருவில் சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்கா 2007ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அண்மைகாலமாக பூங்கா பராமரிப்பு இல்லாமல் இருப்பதால், இரவு நேரங்களில் சிலர் இங்கு வந்து மது அருந்திவிட்டு பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருள்களை அங்கேயே விட்டு சென்றுவந்தனர்.

கடந்த வாரம் பள்ளிகள் திறக்கப்பட்டதால், இங்கு சிறுவர்கள் முற்றிலும் வருவதில்லை. இதனால் காலை முதல் இரவு வரை மதுப்பிரியர்கள் இங்கு வந்து மதுஅருந்த ஆரம்பித்துவிட்டனர். இதனால் பூங்கா மது பாட்டில்கள், சாராய பாக்கெட்டுகள், குப்பைகள் கொட்டும் இடமாக காட்சியளிக்கிறது. எனவே செங்கம் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஸ்டாலினை விமர்சித்தவரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.