திருவண்ணாமலை: ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் இன்று (ஆக-13) 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 750 கொடி கம்பங்களை அமைத்து 750 தேசியக் கொடியை ஒரே நேரத்தில் மாணவ மாணவிகள் ஏற்றினர்.
இந்த நிகழ்வில் 75 கிலோ காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்ட தேசியக்கொடியும் இடம்பெற்றது. ஒரே இடத்தில் 750 கொடிக்கம்பங்களை அமைத்து தேசியக் கொடியை ஏற்றி பள்ளி மாணவர்கள் செய்த அப்துல்கலாம் புக் ஷாப் வேர்ல்ட் ரெக்கார்டு என்ற புத்தகத்தில் இடம்பெற்றது.
இதையும் படிங்க: ஆரணியில் தேசியக் கொடியுடன் 5,000 மாணவர்கள் பிரம்மாண்ட அணிவகுப்பு