திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் 74ஆவது சுதந்திர தின விழா நிகழ்ச்சியானது, வழக்கமாக நடைபெறும் எந்தவொரு கலைநிகழ்ச்சியும் இல்லாமல், குறைந்த எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டதோடு, தகுந்த இடைவெளியைப் பின்பற்றி சுதந்திர தின விழா நடைபெற்றது .
சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ் கந்தசாமி மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் உடனிருந்தார்.
அதனைத் தொடர்ந்து சமாதானம் மற்றும் சுதந்திரத்தை பறைசாற்றும் விதமாக புறாக்கள் மற்றும் மூவர்ண பலூன்களை காற்றில் பறக்க விட்டனர். மேலும், பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த சுதந்திர தின போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகள் அமர்ந்திருந்த இடத்திற்கு ஆட்சியர் நேரில் சென்று அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார்.
சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட துறைகள் மூலம் 574 பயனாளிகளுக்கு ரூபாய் ஒரு கோடியே 95 லட்சத்து 22 ஆயிரத்து 2 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் 148 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வழங்கினார்.
இதையும் படிங்க: அரசுப் பள்ளியில் தேசியக் கொடியேற்றிய தூய்மைப் பணியாளர்!