திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி டவுன் கோட்டை தெருவை சேர்ந்தவர் சிக்கன் பக்கோடா வியாபாரி நசீர்கான் (30). சிறையில் இருந்த நசீர்கானுக்கும், அதேபகுதியை சேர்ந்த மஸ்தானுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமக கடந்த 7ஆம் தேதி இரவு முகமூடி அணிந்த 7 பேர் கொண்ட கும்பலால் நசீர்கானை வெட்டி கொலை செய்தனர். இதுதொடர்பாக காவல் துணை கண்காணிப்பாளர் தங்கரமன் தலைமையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு (ஏப்ரல்.11) வந்தவாசி அடுத்த புரிமை ஏரியில், கொலையாளி 7 பேர் கொண்ட கும்பலை சுற்று வளைத்து பிடித்தனர். பின்னர் அங்கிருந்த ஆட்டோவை சோதனை செய்ததில் கோடாரி , வீச்சறிவாள் கத்தி உள்ளிட்ட பொருட்கள், 2 பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர் .
அதில், தன்னை கழுத்தை அறுத்து கொலை செய்ய திட்டமிட்டதால், சிறையிலிருந்த நசீர்கான் வெளியே வந்ததும் கொலை செய்ய 7 பேர் கொண்ட கும்பலை தயார் செய்தேன் என்று மஸ்தான் கூறியுள்ளார். இதுகுறித்து எனது நண்பர்களான பழ வியாபாரி நூருல்லா (22) , கவியரசு (28) , சான் பாஷா (31), சதாம் உசேன் (28 ), முகமது ரபி (32) , முகமது அலி (32) ஆகியோர்களிடம் கூறி கொலை செய்தோம் என்று ஒப்புக்கொண்டனர். இதையடுத்து மஸ்தான் உட்பட 7 பேரை காவல் துறையினர் கைது செய்து வந்தவாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: திருவண்ணாமலையில் வேகமெடுக்கும் கரோனா!