திருவண்ணாமலை : ஆரணிபாளையம் காந்தி சாலையில் உள்ள மாரியம்மன் கோயிலில் இன்று காலை(ஜூலை 20) பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக கோயிலுக்கு சென்றனர்.
அப்போது கோயில் வளாகத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதனால் பக்தர்கள் குழந்தையை தேடிப்பார்த்துள்ளனர்.
அப்போது சுமார் 3 மாத பச்சிளம் ஆண்குழந்தை இருந்தது தெரியவந்தது. இது குறித்து உடனடியாக ஆரணி அனைத்து மகளிர் போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து அங்கு சென்ற போலீசார், குந்தையை மீட்டனர். கோயிலில் குழந்தையை விட்டு சென்றவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க :2ஆம் அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை' - ஒன்றிய அமைச்சர்