தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் தாக்கத்தால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்கள் யாரும் வெளியே வராமல் தவித்துவருகின்றனர். இதனால் பல்வேறு தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டதால், தினக்கூலி செய்துவரும் அனைவரும் வாழ்வாதாரம் இன்றி மிகவும் தவித்துவருகின்றனர். எனவே, பல்வேறு தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள் இணைந்து ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் பல நலத்திட்ட உதவிகளைச் செய்துவருகின்றனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் கிராமத்தில் வசித்துவரும் அரசுப் பள்ளி ஆசிரியர் செந்தில் குமார். இவர் வேட்டவலம் பேரூராட்சிக்குள்பட்ட ஆதி திராவிடர் குடியிருப்புப் பகுதியில், தற்பொழுது வாழ்வாதாரம் இல்லாமல் அவதிப்பட்டுவரும் 1000 ஆதி திராவிடர் குடும்பங்களுக்குத் தனது சொந்த செலவில், 3 லட்சம் ரூபாய் மதிப்பில் அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட தொகுப்பினை வழங்கினார்.
இந்த நலத்திட்ட உதவிகளைப் பெறவந்த பயனாளிகள் அனைவரும் தனிநபர் இடைவெளியைப் பின்பற்றி, நலத்திட்ட உதவிகளைப் பெற்றுச் சென்றனர்.
இதையும் படிங்க: கரோனா: மருத்துவர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை