ETV Bharat / state

பறக்கும்படை வாகனத்தில் டிரைவர் இல்லாததால் 3 நாட்கள் பணி நிறுத்தம்! - Thiruvannamalai District News

செய்யாறில் பறக்கும்படை வாகனங்களை இயக்க ஓட்டுநர்கள் இல்லாததால் 3ஆவது நாளாக ரோந்துப் பணியில் ஈடுபடாமல் தாலுகா அலுவலகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பறக்கும்படை வாகனம்
பறக்கும்படை வாகனம்
author img

By

Published : Mar 15, 2021, 1:41 PM IST

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் பணிக்காக பறக்கும்படை குழுக்கள் மூன்றும், நிலை கண்காணிப்புக் குழுக்கள் மூன்றும் என ஆறு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

ஒரு குழுவில் ஒரு கண்காணிப்பு அலுவலர், ஒரு பெண் போலீஸ் உட்பட மூன்று போலீசார், ஒரு வீடியோகிராஃபர் நியமிக்கப்பட்டனர். மேலும் அந்தக் குழுவிற்கு ஒரு அரசு வாகனம் ஒதுக்கப்பட்டு, தொகுதிக்குட்பட்ட சாலைகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதோடு, அவ்வழியாக வரும் வாகனங்களில் உரிய ஆவணமின்றி பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றனவா என பரிசோதனை செய்து உரிய ஆவணம் இல்லாமல் இருக்கும் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்வதற்காக ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு குழுவும் 3 ஷிஃப்ட்டுகளாகப் பிரித்து சுழற்சி முறையில் அலுவவலர்கள், போலீசார் பணியில் ஈடுபட்டு வருவது வழக்கம். இந்நிலையில் செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட பறக்கும் படை குழு வாகனத்தின் டிரைவர் பணிக்கு வராததால் ரோந்துப் பணிக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஓட்டுநர்கள் வராததால் தாலுகா அலுவலக வளாகத்திலேயே வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ரோந்துப்பணிக்கு வந்த போலீசார், அலுவர்கள், வீடியோகிராஃபர்கள் தாலுகா அலுவலகத்திலேயே காத்துக்கிடந்தனர்.

இதுகுறித்து அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் பிரமுகர்கள், அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: 'அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தை எந்தக் காலத்திலும் அசைக்க முடியாது' - தமாகா வேட்பாளர் பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.