திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவையான அரிசி வெளி மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, சரக்கு ரயில்கள் மூலம் நேரடியாக கொண்டுவரப்பட்டு வருகிறது.
ரேஷன் கடைகளில் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் அரிசி பயனாளிகளுக்கு தட்டுப்பாடின்றி கிடைத்திட அரசாங்கம் வெளி மாநிலங்களிலிருந்து அரிசி கொள்முதல் செய்து, அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க 2,642 டன் ரேஷன் அரிசி தெலங்கானா மாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்து சரக்கு ரயில் மூலம் இன்று (ஜனவரி 20) திருவண்ணாமலை ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.
பின்னர், ரயில் நிலையத்திலிருந்து சரக்கு லாரிகள் மூலம் திருவண்ணாமலை அருகே புதுமன்னை கிராமத்தில் உள்ள அரசு நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு சரக்கு லாரிகள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டன.
இதையும் படிங்க: 'ஸ்டாலினால் முதலமைச்சராக முடியாது' - வைகைச்செல்வன்