திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்றுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 470ஆக இருந்தது. இன்று புதிதாக 13 பேருக்கு நோய் தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 483 ஆக உயர்ந்துள்ளது.
இன்று கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் நான்கு பேர் சென்னையிலிருந்து வந்தவர்கள். ஒருவர் ஏற்கனவே கரோனா உறுதி செய்யப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர். இதுதவிர நான்கு பேர் என்று மொத்தம் 13 பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது.
பகுதி வாரியான தகவல்
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தண்டராம்பட்டு மற்றும் காட்டாம்பூண்டி வட்டங்களை சேர்ந்த தலா இருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுப்பாளையம் மற்றும் கலசபாக்கம் வட்டங்களில் இருந்து தலா ஒருவர், செங்கம் வட்டத்தில் இருந்து மூன்று பேர், திருவண்ணாமலை நகராட்சியை சேர்ந்த நான்கு பேர் என மொத்தம் 13 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் தற்போது திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
தமிழ்நாட்டில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நான்காவது இடத்தில் திருவண்ணாமலை மாவட்டம் உள்ளது.
இதையும் படிங்க: சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கரோனா இல்லை - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்