திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (ஜூலை 9) வரை, கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 757 ஆக இருந்தது. இன்று ( ஜூலை 10) புதிதாக 103 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது. இதனால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 860 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1, 607 பேர் ஆகும். 20 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
பெங்களூரு மற்றும் மும்பையில் இருந்து வந்த தலா ஒருவர், கிருஷ்ணகிரியில் இருந்து வந்த 2 பேர், நோயாளியுடன் தொடர்பில் இருந்த 19 பேர், இரண்டாம் நிலை நோய்த்தொற்று பெற்ற 21 பேர், புறநோயாளிகள் பிரிவில் இருந்து 43 பேர், முன் களப்பணியாளர் ஒருவர், மற்ற மாவட்டங்களில் இருந்து அனுப்பப்பட்ட 15 பேர் உள்ளிட்ட 103 பேருக்கு இன்று மட்டும் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள கரோனா வார்டுகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
திருவண்ணாமலையில் ஒரே நாளில் 103 பேருக்குக் கரோனா
திருவண்ணாமலை: மாவட்டத்தில் ஒரே நாளில் மட்டும் 103 பேருக்குக் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.