ETV Bharat / state

கைவிட்ட அரசாங்கம்: மக்கள் முயற்சியால் தூர்வாரப்படும் குளம்! - குளம்

திருவள்ளூர்:திருநின்றவூர் அருகே நடுகுத்தகை ஊராட்சியில் உள்ள குளத்தை அப்பகுதி மக்களே தூர்வாரி வருகின்றனர்

cleaning up water body
author img

By

Published : Jul 26, 2019, 11:11 AM IST

திருநின்றவூர் அருகே நடுகுத்தகை ஊராட்சியில் 1200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர்.இந்தப் பகுதியில் உள்ள கங்கையம்மன் கோவில் அருகே 1.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பழமையான குளம் ஒன்று அவர்களின் நீராதாரமாக விளங்கியுள்ளது.

பல நாட்களாக தூர்வாரப்படாமல் கிடந்த இந்தக் குளத்தை தூர்வார வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், அலுவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நடுகுத்தகை கிராமம்

இந்நிலையில் அப்பகுதி இளைஞர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து குளத்தை தூர்வார முடிவு செய்துள்ளனர். இதற்காக மக்களிடம் நிதி திரட்டி குளத்தில் கிடந்த திடக்கழிவுகளை அகற்றியிருக்கிறார்கள்.

மக்களால் தூர்வாரப்பட்ட குளம்  நடுகுத்தகை  Nadukuthagai  pond  தூர்வாரப்பட்டது
நடுகுத்தகை கிராமத்தை சேர்ந்த இளைஞர்

மேலும், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் குளத்தை தூர்வாரி குளத்தின் கரைகளை பலப்படுத்தி வருகின்றனர். இப்பணிகளை தொடர்ந்து சில நாட்கள் செய்யவுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவித்தனர்.

Intro:திருநின்றவூர் அருகே நடு குத்தகை ஊராட்சியில் உள்ள குளத்தை தூர்வாரி, ஆழப்படுத்தி பொதுமக்கள் சீரமைத்து வருகின்றனர்.Body:ஆவடி அடுத்த திருநின்றவூர், நடுக்குத்தகை ஊராட்சி, 1வது வார்டில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு 1200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதே பகுதி கங்கையம்மன் கோயில் அருகில் 1.5 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. இந்த குளம் அப்பகுதி மக்களுக்கு நீராதாரமாக விளங்கி வருகிறது. இந்த குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் பராமரிப்பின்றி கிடக்கிறது. இதனால் மழை காலங்களில் இந்த குளத்தில் சிறிதளவே தண்ணீரை சேமிக்க முடியும். மேலும், இந்த தண்ணீரும் கோடை காலத்தில் வறண்டு போய் விடும். இதனை அடுத்து , அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விடும். இதனால் குடியிருப்புகளில் உள்ள போர்வெல், கிணறுகளில் தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வருவார்கள். இந்த குளத்தை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியருக்கு பலமுறை புகார் அளித்து வந்தனர். இருந்த போதிலும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்தனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் பருவ மழையின் போது குளத்தில் தண்ணீரை குறைவாகவே சேமிக்க முடிந்தது. இதனையடுத்து நடுகுத்தகை கிராமத்தை சார்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் இளைஞர்கள், பெண்களுடன் சேர்ந்து குளத்தை தூர்வாரி ஆழப்படுத்த முடிவு செய்தனர். இதற்காக, அவர்களில் சிலர் தூர்வாறும் பணி செலவிற்கு தங்களால் முடிந்தவர்களிடம் பண உதவிகளை திரட்டினர். பின்னர், சமூக ஆர்வலர்கள் சேர்ந்து குளத்தில் கிடந்த குப்பைகள் கழிவுகளை அப்புறப்படுத்தினர். மேலும் அவர்கள் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் குளத்தை தூர்வாரி ஆழப்படுத்தி வருகின்றனர்.மேலும், அந்த மணலை கொண்டு குளத்தின் கரைகளை பலப்படுத்தி வருகின்றனர். இந்த பணிகளை சமூக ஆர்வலர்கள், இளைஞருடன் சேர்ந்து தொடர்ந்து சில நாட்கள் செய்ய உள்ளனர். இப்பணிகளை செய்து வருவோர்களை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.