திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மாடலிங் செய்து வரும் 26 வயது இளம்பெண்ணுக்கு, திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர் மாடலிங் நடிகை பணிக்கு செல்ல விஜய் என்பவரது ஆட்டோவை பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது.
இதனால் இருவரும் நட்பாகப் பழகி வந்ததாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி இளம்பெண்ணை விஜய் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 3ஆம் தேதி மாடலிங் செய்வதற்காக ஆட்டோ ஓட்டுநர் விஜய் இளம்பெண்ணை அழைத்து சென்றுள்ளார். பணி முடிந்ததும் இளம்பெண்ணை ஆட்டோவில் ஏற்றிய விஜய், தனது வீட்டிற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இது குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் அவர்கள் மிரட்டியுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசில் புகார் அளித்தார். அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: வெள்ளியைத் திருடி குறைவான விலைக்கு விற்ற நகைக்கடை ஊழியர் கைது