திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த மனோகரன் - மஞ்சுளா தம்பதியரின் மகள் மோகன விஜய ராகவி (16). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்றுவருகிறார்.
கும்மிடிப்பூண்டியில் இயங்கிவரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், கடந்த ஐந்து ஆண்டு காலமாக யோகாசன பயிற்சி பெற்றுவருகிறார்.
இந்நிலையில் யோகக்கலையில் மிகவும் கடினமாகக் கருதப்படும் ‘கண்டபேருண்டாசனத்தில்’ மாணவி மோகன விஜய ராகவி தொடர்ந்து 15 நிமிடங்கள் நின்று புதிய உலக சாதனை படைத்தார்.
அதன்மூலம் ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டு’, ‘ஆவ்சம் உலக சாதனை’ புத்தகத்தில் இடம்பிடித்தார். யோகாவில் உலகச் சாதனை படைத்த மாணவி, யோகா பயிற்சியாளர் எஸ். சந்தியா ஆகியோரை சக மாணவர்களும், கும்மிடிப்பூண்டி பகுதி மக்களும் வெகுவாகப் பாராட்டிவருகின்றனர்.
இதையும் படிங்க: ஆயுத பூஜை: 2 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குப் பயணம்