திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் சென்னை சமூக சேவை சங்கம் மற்றும் மீஞ்சூர் ஒன்றிய அளவிலான மலரும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு இணைந்து சமூகம் சார்ந்த மறுவாழ்வுத் திட்டம் சார்பில் பேரிடர்களை சமாளிக்க எனும் தலைப்பில் நடத்திய உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா -2020 நடைபெற்றது.
சென்னை சமூக சேவை சங்க இயக்குனர் அருட்தந்தை ஜோசப் தலைமையில் பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தல அதிபர் கபிரியேல் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விஜய் லாரன்ஸ் கலைக்குழு மாற்றுத்திறனாளிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் வாழ்க்கையில் மாற்றுத்திறனாளிகள் தாங்கள் சந்தித்த சோதனைகளை, சாதித்த சாதனைகளை தங்கள் வாழ்வின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
பின்னர் காது கேளாதோர் கருவிகள், பார்வையற்றோர் கைக்கொள்ளும் வழிகாட்டும் குச்சிகள், தையல் இயந்திரங்கள், உதவி தொகைகள், கடன் உதவிகள் உள்ளிட்ட நலத்திட்டங்களை சென்னை சமூக சேவை சங்க இயக்குனர் ஜோசப் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து மீஞ்சூர் ஒன்றிய அளவிலான மீனவர் கூட்டமைப்பு சென்னை சமூக சேவை மையத்தின் பணியாளர்கள் மற்றும் கிராம நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் இதில் கலந்துகொண்டனர். இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஹாஜா மொய்தீன் நன்றி உரையாற்றினார்.
இதையும் படிங்க : 20% விபத்து குறைந்துள்ளது- அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்