ETV Bharat / state

தடுத்து நிறுத்திய காவல்துறை: சாலை மறியலில் குதித்த தனியார் நிறுவன ஊழியர்கள்! - SOZHAVARAM

திருவள்ளூர்: சோழவரம் அருகே தனியார் நிறுவனத்திற்கு எதிராக குடும்பத்துடன் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட சென்ற தொழிலாளிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்திதால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோப்புப்படம்
author img

By

Published : May 7, 2019, 9:39 AM IST

சோழவரம் அருகே உள்ள இருளிப்பட்டு கிராமத்தில் செயல்படும் தேஜா ரப்பர் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாததைக் கண்டித்து கடந்த 14 நாட்களாக அந்நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால், அதுகுறித்து அந்நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று, சிஐடியு மாவட்டத் தலைவர் விஜயன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஊர்வலமாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். காவல்துறையினரின் தடுப்பை மீறி சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை நோக்கி சென்ற அவர்களை தடுத்ததால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. பின்னர், போராட்டத்தில் ஈடுபட வந்தவர்கள் ஜெகன்நாதபுரம் சாலையில் அமர்ந்து சாலையில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களை கைது செய்த காவல்துறையினர், வாகனத்தில் கொண்டுசென்று தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

Intro:

Body:

திருவள்ளூர் மாவட்டம் செய்தியாளர் சுரேஷ்பாபு

திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி நடத்தி வந்த 14 நாட்கள் போராட்டத்தை கண்டுகொள்ளாததால் குடும்பத்துடன் ஊர்வலமாகச் சென்ற 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி தடுத்ததால் திடீர் மறியலில் ஈடுபட்டனர் மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்

சோழவரம் அருகே உள்ள இருளிப்பட்டு கிராமத்தில் செயல்படும்  தேஜோ ரப்பர் உதிரி பாகம் தயாரிக்கும்  தொழிற்சாலையில் 14 நாளாக தொடரும் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து குடும்பத்துடன் சிஐடியு மாவட்டத் தலைவர் விஜயன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஊர்வலமாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு இருந்தனர் போலீசாரின் தடுப்பையும் மீறி சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை நோக்கிச் சென்ற தொழிலாளர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் காவல்துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தி தடுத்ததால்  இருளிபட்டு ஜெகன்நாதபுரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர் அவர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் கொண்டு கொண்டு சென்று தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

visual send in ftp.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.