ETV Bharat / state

திருவள்ளூரில் மின்சாரம் பாய்ந்து வயர் மேன் பலி - Wireman Dead in Thiruvallur

திருவள்ளூர்: மின்மாற்றியில் மின்சாரத் துண்டிப்பை சரி செய்ய முயன்ற வயர் மேன் மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

மின்சாரம் தாக்கி ஒயர்மேன் உயிரிழப்பு  ஒயர்மேன் உயிரிழப்பு  திருவள்ளூரில் ஒயர்மேன் உயிரிழப்பு  Wireman Dead By power outage in Thiruvallur  Wireman Dead By power outage  Wireman Dead in Thiruvallur  A Man Dies power outage in Thiruvallur
Wireman Dead By power outage
author img

By

Published : Mar 31, 2021, 12:27 PM IST

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் உமாபதி (45). இவர் கடந்த 15 ஆண்டுகளாக பூண்டி மின் பகிர்மான பிரிவில் வயர் மேனாகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், புல்லரம்பாக்கம் ஜெஜெ.நகர் பகுதியில் ஏற்பட்ட மின் பழுதை சரி செய்வதற்காக கண்ணியம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலையும், உமாபதியும் சென்றுள்ளனர்.

அப்போது, மின்மாற்றியின் மேல் ஏறி சரி செய்து கொண்டிருந்த உமாபதி மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஏழுமலை இது குறித்து உடனடியாக புல்லரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த் தலைமையிலான காவலர்கள், உமாபதியின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: வெட்டுக்காயத்துடன் மூதாட்டி மரணம்: பேரனுக்கு வலைவீச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.