திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மை நலத்துறை பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம், மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மையத்தில் நேற்று (ஜூலை 28) நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சிறப்பு விருந்தினராக பங்கேற்று மக்களுடன் ஆலோசனை மேற்கொண்டு கோரிக்கை மனுக்களை பெற்றார்.
சிறுபான்மையினருக்கு நலத்திட்டங்கள்
இதையடுத்து அவர் ரூ. 3 லட்சத்து 79 ஆயிரத்து 442 நிதியில் 32 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், சலவை பெட்டி ஆகியவற்றை கடனுதவி பயனாளிகளுக்கு நிவாரணமாக வழங்கினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக சிறுபான்மை நலத்திட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படவில்லை. அவை வாய்மொழியாக மட்டும்தான் இருந்ததே தவிர
செயல்படுத்தப்படவில்லை.
சிறுபான்மையினர் நலத்துறை திட்டங்கள் இந்த ஆட்சியில் ஊக்கப்படுத்தப்படுகிறது. சிறுபான்மை மக்கள் ஈமச்சடங்கு செய்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். அதனால் அவர்களுக்கும் இடம் இல்லாமல் தவித்துவருவதால் முதலமைச்சரிடம் இதுதொடர்பாக வலியுறுத்தப்படும்.
கடனுதவி
சிறுபான்மை பெண்கள், இஸ்லாமிய பெண்களுக்கு கடனுதவி கடந்த ஆண்டு பங்கு தொகையை அவர்கள் செலுத்தினாலும் அரசு அவர்களுக்கு கடனுதவி முறையாக அளிக்கவில்லை. இந்த ஆண்டு சிறுபான்மை நலத்துறை வாயிலாக பெண்களுக்கு தொய்வில்லாமல் கடனுதவி இந்த அரசு வழங்கும்" என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சிறுபான்மை ஆணையத்தின் உறுப்பினர், செயலர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'ஆய்வுக்குச்சென்ற மீன்வளத்துறை அலுவலர்களை தடுத்து நிறுத்திய மீனவர்கள்'