ETV Bharat / state

கூவம் ஆற்றில் திருடு போகும் தண்ணீர்; அலுவலர்கள் அலட்சியம்!

திருவள்ளூர்: கூவம் ஆற்றுப்படுகையில் அடையாளம் தெரியாத நபர்கள் தொடர் தண்ணீர் திருட்டில் ஈடுபடுவதால், கால்நடைகளுக்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

தண்ணீர் உறிஞ்ச பயன்படும் மின்மோட்டார்
author img

By

Published : May 5, 2019, 5:38 AM IST

திருவள்ளூர் மாவட்டம், அரண்வாயில் பகுதியில் உள்ள கூவம் ஆற்று படுகையில் தேங்கியுள்ள நீர், கால்நடைகளுக்கு குடிநீராக பயன்படுத்தப்பட்டு வருகிறு. இந்த நீரை அடையாளம் தெரியாத நபர்கள் மின் மோட்டார்களை கொண்டு உறிஞ்சி வருகின்றனர்.

தண்ணீர் உறிஞ்ச பயன்படும் மின்மோட்டார்

இதனால் தற்போது கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது கோடைக்காலம் என்பதால், ஆற்றுப்பகுதி பாலம் பாலமாக வெடித்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால், வரும் காலங்களில் ஆற்றையே திருடி ஏப்பம் விட்டு விடுவர். இதனால் அரசு அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:திருவள்ளூர் கூவம் ஆற்றில் தொடரும் தண்ணீர் திருட்டு ஆறு வறண்டு காட்சியளிக்கிறது அதிகாரிகளின் அலட்சியத்தால் கால்நடைகளுக்கு கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது

Body:திருவள்ளூர் மாவட்டம் அரண்வாயில் பகுதியில் உள்ள கூவம் ஆற்று படுகையில் குட்டைகளில் தேங்கியுள்ள நீர் ஆடு மாடுகளுக்கு பயன்படுத்தப்படும்.

இந்த ஆற்று நீரை மின் மோட்டார்கள் மூலம் உறிஞ்சி தொடர்ந்து தண்ணீர் திருடப்பட்டு வருகிறது .இதனை தடுக்க வேண்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் வருவாய் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால் குட்டைகளில் கோடை காலங்களில் கால்நடைகளின் தாகம் தீர்க்க எப்போதும் நீர் நிறைந்திருக்கும் .தற்போது இந்த இடத்தில் ஒரு துளி கூட தண்ணீர் இல்லாமல் ஆற்றுப்பகுதி பாலம் பாலமாக வெடித்த நிலையில் வறண்டு காணப்படுகிறது.

அதிகாரிகள் கூவம் ஆற்றில் தண்ணீர் திருடுவதை கண்டுகொள்ளாததால் ஆறு வறண்டு போய் பரிதாப நிலையில் காட்சியளிக்கிறது கூவம் ஆற்று படுகையில் ஏற்கனவே ஆழ்துளை கிணறு கரையோரங்களில் தண்ணீரை பெருமளவிற்கு திருடி தனியார் நிறுவனங்களுக்கும் திருமண மண்டபங்களுக்கு விற்பனை செய்துவரும் நிலையில்.

ஆற்றுக்குள் குட்டைகளில் தேங்கி இருந்த நீரையும் குறிவைத்து திருடும் கும்பலை தடுக்காததால் கூவம் ஆறு பரிதாப நிலைக்கு மாற காரணமாகிவிடுகிறது. அடிக்கும் வெயில் வெப்பத்திற்கு ஆடு மாடுகள் கூட தண்ணீர் தேடி கிடைக்காததால் கால்நடைகள் நிலை கவலைக்கிடமாகவே தெரிகின்றது.

ETVபாரத் ெய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்பாபு

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.