ETV Bharat / state

தொடர் மழையால் பூண்டி ஏரியில் 1.2 டிஎம்சி தண்ணீர் உயர்வு! - திருவள்ளூர் பூண்டி ஏரி

திருவள்ளூர்: கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், நீர் ஆதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் 1.2 டிஎம்சி தண்ணீர் உயர்ந்துள்ளது.

கனமழையால் நீர்மட்டம் உயர்ந்த சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்
கனமழையால் நீர்மட்டம் உயர்ந்த சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்
author img

By

Published : Dec 3, 2019, 9:53 AM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய நீர்த்தேக்கங்களில் ஒன்றான பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கமானது, மூன்றாயிரத்து 732 கனஅடி கொள்ளவு கொண்டது. மேலும், 3.2 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கக்கூடிய ஒரு நீர் தேக்கமாக விளங்கி வருகிறது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் ஒரே நாளில் 2428 கனஅடி மழைநீர் சேகரிக்கப்பட்டு, 1.2 டிஎம்சி நீர் உயர்ந்துள்ளது. மேலும், கிருஷ்ணா கால்வாய் வழியாக சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு கிடைக்கக்கூடிய நீரானது 497 கனஅடி ஆகும்.

கனமழையால் நீர்மட்டம் உயர்ந்த சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்

மேலும், பூஞ்சை ஓடை, அல்லிகுழி ஓடை, பூண்டி ஓடை போன்ற ஓடைகளிலிருந்து வரக்கூடிய மழை நீரானது சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் சேகரிக்கப்படுகிறது. அற்றம்பாக்கம் அருகில் கட்டியுள்ள தடுப்பணைகளால் நீர் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், ஆங்காங்கே தடுப்பு அணைகள் கட்டப்பட்டால் நீர் வீணாகாமல் சேகரிக்கப்படும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: கனமழை காரணமாக ஆண்டியப்பனூர் அணையில் நீர்மட்டம் உயர்ந்தது!

Intro:திருவள்ளூர் மாவட்டத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்யும் தொடர் மழையினால் நீர் நிரம்பும் நிலை நெருங்குகிறது....

Body:திருவள்ளூர் மாவட்டத்தில் நீர் ஆதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் ஆனது நேற்று முதல் பெய்ய தொடங்கிய மழையினாலும் கண்டலேறு அணையில் இருந்து விடப்படும் கிருஷ்ணா நதி நீராலும் பூண்டி நீர்த்தேக்கத்தில் 1.2 டிஎம்சி தண்ணீர் வரை சேகரிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கக் கூடிய நீர்த்தேக்கங்களில் ஒன்றான பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் ஆனது 3 ஆயிரத்து 732 கன அடி கொள்ளளவு உடைய 3.2 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்க கூடிய ஒரு நீர் தேக்கமாக விளங்கக் கூடியது ஆனால் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முதல் பெய்த மழையினால் 1.2 டிஎம்சி தண்ணீர் வரை சேகரிக்கப்பட்டுள்ளது.

பலத்த மழையினாலும் பூண்டி ஏரியை சுற்றிலும் உள்ள ஓடைகளிலும் தண்ணீர் பூண்டி நீர்தேக்கத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் நேற்று பெய்த பலத்த மழையால் மற்றும் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் ஒரே நாளில் 2428 கன அடி மழைநீர் சேகரிக்கப் பட்டு உள்ளது. மேலும் கிருஷ்ணா கால்வாய் வழியாக கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து பெறப்படும் தண்ணீரானது 497 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது மேலும் பூண்டி நீர்த்தேக்கத்தின் சுற்றியுள்ள சிறு ஓடைகளில் நீர் மழைநீர் சேகரிக்கப்படுகிறது வருகிறது மேலும் பூஞ்சை ஓடை அல்லி குழி ஓடை பூண்டி ஓடை போன்ற ஓடைகள் இருந்து பெறப்படும் வெள்ள நீரானது பூண்டி நீர்த் தேக்கத்தில் சேகரிக்கப்பட்டு வருகிறது மேலும் அற்றம் பாக்கம் அருகில் கட்டியுள்ள தடுப்பணைகளை நிரம்பி வழிகிறது இதே போல் ஆங்காங்கே தடுப்பு அணைகள் கட்டப்பட்டால் நீர் சேகரிக்கப்படும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.