திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக 14 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 230 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 596 கிராம ஊராட்சித் தலைவர்கள், 3945 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 2,577 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் இன்று 14 இடங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணப்பட உள்ளன.
மேலும், பதவிகளுக்கான நிறங்கள் வாரியாக (மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு - மஞ்சள், ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் - பச்சை, ஊராட்சி மன்றத் தலைவர் - இளஞ்சிவப்பு, கிராம ஊராட்சிக் குழு - வெள்ளை, நீலம்) பிரிப்பதற்காக 660 மேஜைகள் அமைக்கப்பட்டு, 1980 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பிரிக்கப்பட்ட வாக்குகளை எண்ணுவதற்கு 5953 அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கையினை கண்காணித்திட 84 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கையை கேமராவில் பதிவு செய்ய வேண்டும் - திமுக மனு