திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வெல்டிங் கடை, பஞ்சர் கடை, டீக்கடை, வாகன உதிரி பாகங்கள் விற்பனையகம் என அடுத்தடுத்த 4 கடைகளின் பூட்டை உடைத்த அடையாளம் தெரியாத நபர்கள் காப்பர் மின்சார ஒயர், ஆயில், 50ஆயிரம் ரூபாய் என மொத்தம் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
மேலும் திருடிய ஒயரை அதே இடத்தில் தீயிட்டு எரிந்துவிட்டு சென்றுள்ளனர். காவல் துறையினரிடமிருந்து தப்பிக்க கடை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களையும் திருடிச் சென்றுள்ளனர்.
இன்று தளர்வில்லா முழு ஊரடங்கில் கடைகள் திறக்கப்படாது என்பதால் கைவரிசையை காட்டியுள்ளனர். இதுகுறித்து சிப்காட் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.