ETV Bharat / state

இருசக்கர வாகனத்திலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தவர்கள் பலி - இரு சக்கர வாகன விபத்து

திருவள்ளூர்: பூந்தமல்லி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தவர்கள் மீது டேங்கர் லாரி ஏறி இறங்கியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

பலியானவர்கள்
பலியானவர்கள்
author img

By

Published : Jun 13, 2020, 6:48 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த நடுவீரப்பட்டு அன்னை தெரசா நகர் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் (22). இவர் கனரக வாகனங்களுக்கு டிங்கரிங் செய்யும் வேலை செய்து வருகிறார். இவரது நண்பரான நடுவீரப்பட்டு, காயிதே மில்லத் தெருவைச் சேர்ந்த சிவா (20) என்பவர் வாகனங்களை வாட்டர் வாஷ் செய்யும் வேலை செய்து வந்தார்.

இருவரும், இன்று (ஜூன் 13) நசரத்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, நசரத்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது காற்று வீசியதில் சாலையில் கிடந்த அட்டை பறந்து வந்து இருசக்கர வாகனம் ஓட்டி வந்த சிவா முகத்தில் பட்டுள்ளது.

கண்கள் மறைக்கப்பட்டதால் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்த இருவரும் சாலையில் கீழே விழுந்தனர். இந்நிலையில், பின்னால் வேகமாக வந்த டேங்கர் லாரி, இருவர் மீதும் ஏறி இறங்கியதில் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்திற்கு காரணமான டேங்கர் லாரி ஓட்டுநர் நரசிம்மன் என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.