தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தேர்தல் அலுவலர்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (மார்ச் 8) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் பொன்னையா கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்தப் பேரணியின்போது பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
இதையும் படிங்க: 100% வாக்குப்பதிவு - விழிப்புணர்வு கோலப்போட்டி