ETV Bharat / state

போதை வஸ்து காய்ச்சும்போது தீ விபத்து: இருவரிடம் காவல் துறை விசாரணை!

author img

By

Published : Nov 12, 2019, 1:04 PM IST

சென்னை: திருவேற்காடு அருகே லாட்ஜில் போதை வஸ்து காய்ச்சும்போது ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

thiruverkadu

திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம், மாந்தோப்பு சாலையில் தனியாருக்குச் சொந்தமான விடுதி செயல்பட்டுவருகிறது. இணையத்தில் முன்பதிவு செய்துவிட்டு இங்கு வந்தால் சமையல் செய்ய அடுப்புகள் என அனைத்தும் இருக்கும்.

இந்நிலையில், கடந்த 7ஆம் தேதி பெருங்குடியைச் சேர்ந்த ரெய்ஸ் ராஜா (34), அவரது நண்பர்கள் மாசி (என்ற) ராஜேஷ், ராஜி (என்ற) ஞானவேல்ராஜா, விக்னேஷ், முகமது ரசாக் ஆகிய ஐந்து பேரும் விடுதியில் தங்கியுள்ளனர்.

சம்பவத்தன்று ராஜேஷ், ஞானவேல்ராஜா, முகமது ரசாக் ஆகியோர் மதுபானம் வாங்க வெளியே சென்றுவிட்டனர். அப்போது ரெய்ஸ் ராஜா, விக்னேஷ் இருவரும் சாராயம், கஞ்சா, போதையேற்றும் ஒருவித அமிலத்தைச் சேர்த்துக் காய்ச்சியுள்ளனர்.

அப்போது, ராஜா சிகரெட்டை பற்றவைத்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் அவருக்கும், விக்னேஷுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இவர்களது அலறல் சத்தம் கேட்டு விடுதி ஊழியர்கள் அறைக்குள் சென்றனர். ராஜாவின் உடலில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தவர்கள், மேற்கொண்டு செய்வதறியாமல் அவரை அறையிலிருந்து வெளியே இழுத்துப்போட்டனர்.

போதை வஸ்து காய்ச்சும்போது தீ விபத்து

விடுதிக்குத் திரும்பிய நண்பர்கள், ராஜாவை மீட்டு நொளம்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த நொளம்பூர் காவல் துறையினர் தீக்காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் ராஜா, விக்னேஷ் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கஞ்சா, சாராயம், ஒரு அமிலத்தைச் சேர்த்துக் காய்ச்சும்போது கிடைக்கும் ஜெல்லைக் கொண்டு புகைத்தால் அதிகளவில் போதையேறும் என்பதால் இவ்வாறு செய்திருப்பது தெரியவந்தது.

இதையும் படிங்க: அதிமுகவால் மீண்டும் ஒரு விபத்து... இந்த முறை பேனர் இல்லை கொடிக் கம்பம்!

Intro:திருவேற்காடு அருகே லாட்ஜில் போதை வஸ்து காய்ச்சும் போது தீ விபத்தில் இரண்டு பேருக்கு தீக்காயம். 3 பேரிடம் விசாரணை.
Body:திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம், மாந்தோப்பு சாலையில் தனியாருக்கு சொந்தமான விடுதி செயல்பட்டு வருகிறது. ஆன்லைனில் முன் பதிவு செய்து விட்டு இங்கு வந்தால் அந்த விடுதியில் சமையல் செய்ய அடுப்புகள் என அனைத்து வசதிகளும் இருக்கும் நாம் கட்டணத்தை செலுத்தி தங்கி விட்டு சென்றால் மட்டும் போதும் இந்த நிலையில் கடந்த 7 ம் தேதி பெருங்குடியை சேர்ந்த ரெய்ஸ் ராஜா(34), டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது நண்பர்களான
மாசி (என்ற) ராஜேஷ், ராஜி (என்ற), ஞானவேல்ராஜா, விக்னேஷ், முகமது ரசாக் ஆகிய ஐந்து பேருடன் விடுதியில் அறையை வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர். சம்பவத்தன்று மூன்று பேர் மதுபானம் வாங்க வெளியே சென்றுவிட்டனர். ரெய்ஸ் ராஜா, விக்னேஷ் இருவரும் சாராயம், கஞ்சா மற்றும் போதை தரக்கூடிய ஒருவித அமிலத்தை சேர்த்து காய்ச்சும் போது அதிலிருந்து காற்றில் பரவியது அப்போது ராஜா சிகரெட் பிடிக்க பற்ற வைத்தபோது
எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் ராஜா மற்றும் விக்ணேஷ் ஆகிய இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டு அலறினார்கள். இதில் விக்ணேஷ் லேசான தீக்காயங்களுடன் அங்கிருந்து தப்பி சென்றார். அலறல் சத்தம் கேட்டு விடுதி ஊழியர்கள் அறைக்குள் சென்ற போது உடலில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த ராஜாவின் உடலில் எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்து செய்வதறியாமல் அறையில் இருந்து வெளியே கொண்டு ராஜாவை போட்டு விட்டு ஏதும் தெரியாதது போல் இருந்து விட்டனர். கடைக்கு சென்று விட்டு வந்த ராஜாவின் நண்பர்கள் இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்து ராஜாவை ஆம்புலன்ஸ் உதவியோடு நொளம்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நொளம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ராஜாவிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தீக்காயமடைந்த விக்ணேசிடமும் விசாரணை செய்தனர்.Conclusion:விசாரணையில் கஞ்சா, சாராயம் மற்றும் ஒரு அமிலத்தை சேர்த்து காய்ச்சினால் இறுதியில் அதிலிருந்து ஒரு வித ஜெல் போன்ற பொருள் வரும் அதனை எடுத்து சிகரெட்டின் மீது தடவி புகைத்தால் அதிகளவில் ஒரு புதுவிதமான போதை வரும் என்பதால் இவ்வாறு செய்திருப்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் இதுபோல் வேறு எங்காவது செய்துள்ளார்களா? அல்லது போதை கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில்
ராஜாவின் நண்பர்கள் மூன்று பேரிடமும் விசாரணை செய்து வருகின்றனர். தற்போது சம்பவம் நடந்த இடம் திருவேற்காடு போலீஸ் நிலைய எல்லைக்குள் வருவதால் திருவேற்காடு போலீசாருக்கு இந்த வழக்கு மாற்றப்பட உள்ளதாகவும் நொளம்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.