திருவள்ளூர் மாவட்டம் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (56). இவர் கடந்த 26ஆம் தேதியன்று தனது வீட்டருகேவுள்ள கடைக்குச் சென்றுவிட்டு, வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், அவரது கழுத்திலிருந்த இரண்டரை பவுன் தங்க நகையைப் பறித்து தப்பிச் சென்றனர்.
இதையடுத்து, கடந்த 27ஆம் தேதி மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி என்ற பெண்ணிடம், இதேபோல அடையாளம் தெரியாத நபர்கள் கழுத்திலிருந்த எட்டரை பவுன் தங்க நகையைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
நகையைப் பறிகொடுத்த இருவரும் இதுபற்றி மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தனிப்படை அமைத்து அருகில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளைக் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் மாதவரம் மூலக்கடை அருகே சந்தேகத்திற்கிடமான இரண்டு நபர்கள் சுற்றித் திரிவதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அவர்களை காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டதில் இருவரும் பெரம்பூரைச் சேர்ந்த ஹரிஷ் (21), சந்திரன் (22) என்பதும், இவர்கள் இருவரும் சேர்ந்து பெண்களிடம் நகையைப் பறித்துச் சென்றதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்களைக் கைதுசெய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம், 11 சவரன் தங்க நகையைப் பறிமுதல்செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த இளைஞர் கைது!