திருவள்ளூர் மாவட்டம், வல்லூர் தேசிய அனல் மின் நிலைய நுழைவுவாயில் முன்பு தொழிற்சங்கத்தினர் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த போரட்டத்தில், "எட்டு மணி நேர பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தக் கூடாது. வருமான வரி செலுத்தாத ஏழை மக்களுக்கு 7,500 ரூபாய் வழங்க வேண்டும். நலவாரிய தொழிலாளர்கள் பெரும் அனைத்து சலுகைகளையும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும்.
மின்சார திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது” என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்போது, மத்திய அரசுக்கு எதிராக தொழிலாளர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இதையடுத்து, தடையை மீறி அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக சிஐடியு தொழிற்சங்க மாநில துணைத் தலைவர் கே.விஜயின் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: சிஐடியு - ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் போராட்டம்