திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த அம்மையார்குப்பம் வள்ளலார் நகரில் கடந்த ஆறு மாத காலம் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலையின் நடுவே பந்தல் அமைத்து சமையல் செய்து சாப்பிடும் போராட்டதில் ஈடுபட்டனர். இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், குடிநீர் விநியோகத்திற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததால், பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த விநோத போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.