ETV Bharat / state

கையில் மாம்பழத்துடன் வாக்கு சேகரித்த பாமக வேட்பாளர்! - பாமக வேட்பாளர் வைத்திலிங்கம்

திருவள்ளூர் : கையில் மாம்பழத்தை ஏந்தியபடி ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத்தொகுதி பாமக வேட்பாளர் மருத்துவர் வைத்திலிங்கம் வீதி வீதியாக சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

mango
author img

By

Published : Apr 2, 2019, 9:03 PM IST

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இதில் ஸ்ரீ பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக-பாமக கூட்டணி சார்பாக வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். இன்று பரப்புரையை மேற்கொள்வதற்கு முன்னர் பாடி திருவல்லீஸ்வரர் ஆலயத்தில் தரிசனம் செய்தார்.

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வைத்திலிங்கம்

பின்னர் 500-க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் அணிவகுத்து செல்ல, திறந்த வேனில் வந்த வைத்திலிங்கம் கையில் மாம்பழத்தை ஏந்தியவாறு மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வீதி வீதியாக சென்ற வைத்திலிங்கத்திற்கு மக்கள் ஆரத்தி எடுத்தும், பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் வாக்கு சேகரிப்பின் போது அம்பத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வி. அலெக்ஸாண்டர், பாமகவின் மாநில துணை அமைப்பு செயலாளர் சேகர் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.

Intro:கையில் மாம்பழத்தை ஏந்தியபடி ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற பாமக வேட்பாளர் மருத்துவர் வைத்தியலிங்கம் வீதி வீதியாக சென்று வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்.

Body:ஸ்ரீ பெரும்புதூர் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக வேட்பாளர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். இவர் அம்பத்தூர் அடுத்த பாடியில் உள்ள திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார்.அதன் பின்னர் திறந்த வேனில் நின்றபடி கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தனது பிரச்சாரத்தை துவங்கினார்.இந்தப் பிரச்சாரத்தில் 500க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் அணிவகுத்துச் செல்ல ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற பாமக வேட்பாளர் வைத்திலிங்கம் கையில் மாம்பழத்தை ஏந்தியபடி வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்.இவருடன் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுகவின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் வி.அலெக்சாண்டர், பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணை அமைப்பு செயலாளர் கே.என் சேகர் ,பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.அம்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட பாடி, கலெக்டர் நகர், முகப்பேர்,நொளம்பூர் ஆகிய பகுதிகளுக்கு வீதிவீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.அப்போது வேட்பாளருக்கு வழியெங்கிலும் பட்டாசுகள் வெடித்தும் ஆர்த்தி எடுத்தும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Conclusion:அப்போது வேட்பாளருக்கு வழியெங்கிலும் பட்டாசுகள் வெடித்தும் ஆர்த்தி எடுத்தும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.