ETV Bharat / state

குடிநீர் இல்லாமல் தவிக்கும் பேருந்து பயணிகள்- ஆவடியில் அவலம் - water problem

திருவள்ளுர்: ஆவடி பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்காமல் நகராட்சி அலுவலர்கள் அலட்சியம் செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பேருந்து பயணிகள்
author img

By

Published : May 19, 2019, 12:41 PM IST

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பேருந்து நிலையத்துக்கு தமிழ்நாட்டின் வடக்குப்பகுதியில் இருந்து தினந்தோறும் சுமார் 300 பேருந்துகள் வந்து செல்கின்றன. இந்த பேருந்து நிலையத்தை ஆவடி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த அரசு, தனியார் ஊழியர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதியில்லை. இதனால் பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள் தண்ணீர் குடிக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதையறிந்துக் கொண்ட பேருந்து நிலைய வியாபாரிகள், அதிக விலைக்கு குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்து வருகின்றனர்.

குடிநீர் இல்லாமல் தவிக்கும் பேருந்து பயணிகள்

இதுக்குறித்து பலமுறை நகராட்சி அலுவலர்களுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கோடை வெயிலின் தாக்கத்தில் ஏற்படும் தாகத்தை தீர்த்துக் கொள்ள நகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

18.05.19
திருவள்ளுர்
ஆவடி_ஆ.கார்த்திக்

ஆவடி பஸ் நிலையத்தில் பொது மக்களுக்கு தாகம் தீர்க்க குடிநீர் வசதி இல்லை அதிகாரிகள் அலட்சியம்.

சென்னையில் இருந்து திருப்பதிக்கு ஆவடி வழியாக சி.டி.எச் சாலை செல்கிறது. இச்சாலை ஓரத்தில் தான் ஆவடி பஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த பஸ் நிலையம் வழியாக சென்னை, புறநகர், திருவள்ளூர், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட  பகுதிகளுக்கு தினமும் 300க்கு மேற்பட்ட பேருந்துகள் சென்று வருகின்றன. இந்த பஸ் நிலையத்தை ஆவடி சுற்றுவட்டாரத்தை சார்ந்த அரசு, தனியார் ஊழியர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் ஆவடி பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி அறவே செய்யப்படவில்லை. தற்போது சுட்டெரிக்கும் வெயிலால் பயணிகள் தாகத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஆவடியில் தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம்,

ரயில் நிலையம், டிக்கெட் முன்பதிவு மையம்,  கருவூலம், போலீஸ் துணை கமிஷனர் அலுவலகம், உதவி கமிஷனர் அலுவலகம், ஆவடி காவல் நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், மின்சார வாரிய அலுவலகம், அரசு பொது மருத்துவமனை, ராணுவ துறை நிறுவனங்கள், கல்லூரி, பள்ளிக்கூடங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளன. மேற்கண்ட அலுவலங்களுக்கு சென்று வர பெரும்பாலோனோர் ஆவடி பஸ் நிலையம் வந்து சென்று வருகின்றனர். மேலும், இங்கிருந்து திருமுல்லைவாயல் தொழிற்பேட்டை, கோவில்பாதாகை, கண்ணடபாளையம், வெள்ளானூர்,  மோரை, வீராபுரம், மேல்பாக்கம்,

பாண்டேஸ்வரம், கர்லபாக்கம், கதவூர், கன்னியம்மன் நகர், பூச்சி அத்திப்பட்டு உள்ளிட்ட கிராமங்களுக்கும் பொதுமக்கள் வந்து செல்லுகின்றனர்.

இவ்வாறு தினமும் நூற்றுகணக்கானோர் ஆவடி பஸ் நிலையம் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பயணிகளுக்கு குடிநீர் வசதி அறவே செய்து தரப்படவில்லை. கடந்த ஒரு மாதமாக வாட்டிவதைக்கும் வெயிலால் பயணிகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இவர்களில் சிலர் தண்ணீருக்காக அருகில் உள்ள கடைகளுக்கு சென்று காசு கொடுத்து வாங்கி குடிக்கின்றனர். பெரும்பாலானோர் குடிநீர் இன்றி மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக முதியோர், பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் கடுமையான வெயிலில்  கால் கடுக்க நின்று தாகத்தால் மயங்கி விடுகின்றனர். மேலும், இங்கிருந்து மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளும் தண்ணீர் இன்றி நாக்கு வறண்டு போய் விடுகின்றனர். 

    இதுகுறித்து சமூக நல ஆர்வலர்கள் ஆவடி நகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் செய்துள்ளனர். இருந்த போதிலும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதனால் பயணிகள் குடிநீர் இன்றி தாகத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து ஆவடி  பஸ் நிலையத்தில் குடிநீர் வசதியை போர்க்கால அடிப்படையில் செய்து தர வேண்டும் என்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.