ETV Bharat / state

பழைய ரூபாய் நோட்டுகள், ஸ்டாம்புகளை பத்திரமாக பாதுகாத்து வரும் திருவள்ளூர் ஆசிரியர்! - திருவள்ளூர் மாவட்டம்

பழைய ரூபாய் நோட்டுகள், ஸ்டாம்புகள், பழங்கால தொகுப்புகள் எனப் பலவற்றை சேகரித்து பொக்கிஷமாக பாதுகாத்துவருகிறார் திருவள்ளூர் ஆசிரியர்.

பழைய ரூபாய் நோட்டுகள், ஸ்டாம்புகளை பத்திரமாக பாதுகாத்து வரும் திருவள்ளூர் ஆசிரியர்!

author img

By

Published : Nov 4, 2020, 10:34 PM IST

Updated : Nov 14, 2020, 7:30 AM IST

‘ஓல்ட் இஸ் கோல்ட்’ என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட பழைய பொருள்கள் எப்போதும் நமக்கு பொக்கிஷம்தான். பழைய பொருள்கள் மூலம்தான் நம்முடைய முன்னோர்களின் வாழ்வியலை தெரிந்துக் கொள்ள முடியும். அதுமட்டுமின்றி பல அறிய விஷயங்களை அறிந்துக் கொள்ள முடியும்.

அப்படி பொக்கிஷமான பொன்னான பழைய ரூபாய் நோட்டுகள், ஸ்டாம்புகள், பழங்கால தொகுப்புகள் எனப் பலவற்றை சேகரித்து பாதுகாத்துவருகிறார் திருவள்ளூர் ஆசிரியர்.

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் வசித்துவரும் முகமது பாரக் என்பவர் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், ஸ்டாம்புகள், தற்போது புழக்கத்தில் இல்லாத கலைநயமிக்க பழைய பித்தளை பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களைக் கடந்த 40 ஆண்டுகளாக தன்னுடைய வீட்டில் சேகரித்து வருகிறார்.

பழைய ரூபாய் நோட்டுக்கள் ஸ்டாம்புகளை பாதுகாக்கும் ஆசிரியர்

முகமது பாருக் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் உருது மொழி ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் தற்போது அம்பத்தூரில் வசித்து வருகிறார். இவர் சிறுவயது முதலே நாணயங்களைச் சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வந்தவர்.

இதனையொட்டி உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்பட்ட பழங்கால நாணயங்கள் மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் வெளியிடப்பட்ட பழங்கால தபால்தலைகள் ஆகியவற்றை கடந்த 40 ஆண்டு காலமாகச் சேகரித்து வந்துள்ளார்.மேலும் பழங்காலத்தில் பயன்பாட்டில் இருந்த கலைநயமிக்க பித்தளை பாத்திரங்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் உள்பட பல்வேறு வகையான பொருள்களைச் சேகரித்து வைத்துள்ளார்.

பழைய ரூபாய் நோட்டுகள், ஸ்டாம்புகளை பத்திரமாக பாதுகாத்து வரும் திருவள்ளூர் ஆசிரியர்!
பழைய ரூபாய் நோட்டுகள், ஸ்டாம்புகளை பத்திரமாக பாதுகாத்து வரும் திருவள்ளூர் ஆசிரியர்!

இதுகுறித்து முகமது பாருக் கூறுகையில், “நான் சிறுவயதில் இருக்கும் போது எனது வீட்டின் அருகில் வசித்த நபர் ஒருவர் நாணயங்களை சேகரித்து வைத்திருந்தார். எனவே எனக்கு நாணயங்களில் ஆர்வம் உள்ளதால் அவரிடம் சென்று ஒரு நாணயம் கேட்டபோது தர மறுத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து நாமே அனைத்து வகையான நாணயங்களை தேடிப்பிடித்து சேகரித்து வைக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. உடனடியாக பல இடங்களுக்குச் சென்று நாணயங்களைச் சேகரிக்கத் தொடங்கினேன்.

இதற்காக என்னுடைய வருமானத்தில் பாதி வருமானம் இதற்கென செலவிட்டேன் அதுமட்டுமில்லாமல் தபால்தலைகள் என்னை கவர்ந்தன. ஆகையால் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் தபால் தலைகளையும் சேகரிக்கத் தொடங்கினேன். தற்போது என்னிடம் நூறு ஆண்டுகளுக்கு முந்தைய நாணயங்கள், தபால் தலைகள் உள்ளிட்டவைகள் உள்ளன. மேலும் தற்போது பயன்பாட்டில் இல்லாத ஆண்டி கலெக்சன் எனப்படும் கலைநயமிக்க பித்தளை பாத்திரங்கள் கல், முத்து, பவளம் மற்றும் அழகுக்காக வைக்கப்படும் உபகரணங்கள் போன்றவற்றை சேகரித்து வைத்துள்ளேன். இன்று வரையிலும் சேகரிப்பதில் எனக்கு ஆர்வம் உள்ளது. இந்த அளவு பழங்கால பொருள்களை தேடித்தேடி சேகரித்து வருகிறேன். இதனை என்னுடைய பிள்ளைகள் அருகில் உள்ளவர்கள் என்னுடைய வீட்டிற்கு வந்து இதைக் கண்டு களிக்கின்றனர். பழங்காலப் பொருள்கள் ஒரு நாளும் மறக்க முடியாது மறந்து விட முடியாது.

நான் சேகரித்து வைத்துள்ள பொருள்களை பார்த்தால் உங்களுக்குத் தெரியும் என்று ஆச்சரியத்துடன் அவர் நமக்கு தெரிவிக்கிறார். இவர் சேகரித்து வைத்துள்ள பழங்கால பொருள்களின் மதிப்பு சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புடையது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவாரா? மக்களின் பிரார்த்தனை நிறைவேறுமா?

Last Updated : Nov 14, 2020, 7:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.