திருவள்ளூர் மாவட்டத்தில் காக்களூர் தொழில் பேட்டையை ஒட்டியுள்ளது புட்லூர் கிராமம். இதன் அருகில் உள்ள ஊராட்சியில் அமைந்துள்ள நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் அதிகப்படியான மின்சாரத்தை எடுத்துக்கொள்வதால், புட்லூர் கிராமத்தில் மின்சார பிரச்சினைகள் இருந்துவந்துள்ளது.
லோ வோல்டேஜ் காரணமாக பல ஆண்டுகளாக அந்த ஊராட்சி மக்கள் அவதிப்பட்டு வந்துள்ளனர். தொழிற்சாலைகளால் சீரான மின் வினியோகம் இல்லாமல் திடீரென உயர் மின்னழுத்தம், திடீரென குறைந்த மின் அழுத்தம் என மாறி மாறி வருவதால் பல்வேறு மின்சாதன பொருள்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
இந்நிலையில், புட்லூர் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் லோகாம்பாள் கண்ணதாசன் முயற்சி எடுத்து, ஒரு ஊராட்சிக்கு 11 கேவி மின்மாற்றிகள் இருக்கவேண்டும் என்று இரண்டு பதிய மின்மாற்றிகளை ஊராட்சியில் அமைத்துள்ளார். இதன் மூலம், 40 ஆண்டு கால மின்சார பிரச்சினை சரியாகிவிடும் என்றும் மின்சார் பிரச்சினை ஏற்படாது என நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றார்.
இந்நிகழ்ச்சியின்போது, துணைத்தலைவர் சிகாமணி, மின்வாரிய அலுவலர்கள், கிராம மக்கள், வார்டு உறுப்பினர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.