உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் தினம்தோறும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ள நிலையில், பொதுமக்களுக்காக இரவு பகல் பாராது உழைத்துவரும் காவல்துறையினர், மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், அவர்களுக்காக திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் திமுக சார்பில் மாவட்ட செயலாளர் ஆவடி நாசரின் அறிவுறுத்தலின்படி செங்குன்றம் பேரூராட்சி மூன்றாவது வார்டு செயலாளர் கார்த்திக் தலைமையில் முகக் கவசம், கையுறை, சானிடைசர் வழங்கப்பட்டன.
மேலும் தொற்று பரவாமல் தடுக்க தினம்தோறும் தெருக்களில் லைசால் கலந்த கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு: பொதுமக்களுக்கு முகக் கவசங்களை இலவசமாக வழங்கிவரும் தாளாளர்