திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளபபட்டு வருகின்றன.
அதன்படி திருவள்ளூரில் உள்ள நியாவிலைக்கடை மற்றும் அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடியில் தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கிணங்க, மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான பா. பொன்னையா வாக்காளர் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினார்.
இதைத்தொடர்ந்து நியாயவிலைக்கடை செயல்பாடுகளை பார்வையிட்டார். பின்னர் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மேளதாளம் முழங்க தாம்பூலத்தில் பத்திரிக்கை வைத்து வாக்களிக்க அழைப்பு: அடடே ஆட்சியர்!